திவசத்திற்கான முன் ஏற்பாடுகள்:
1. சாஸ்திரிகளுக்கு சொல்லுதல்.
2. ப்ராம்மணாள் ஏற்பாடுகள்.
3. உறவுகளுக்கு சொல்லுதல்
4. வஸ்த்ரம், ஹோமசாமான்கள், சமையல் சாமான்கள் வாங்குதல்
5. பித்தளை தட்டுகள், பித்தளைசொம்பு2, பித்தளை டம்ளர்3, திவச கிண்ணங்கள்5, பஞ்சபாத்ரம், குத்துவிளக்கு இவற்றை தேய்த்து PLASTIC BAGல் கட்டி வைத்தால் கறுத்துப்போகாது.
6.பால் வாங்கி தயிருக்கு தோய்த்தல்.
ஹோம சாமான்கள்:
வரட்டி, சமித்து, நெய், (வெண்ணெய் வாங்கி காய்ச்சித்தருதல் நலம்), தேன், எள், ப.அரிசி, வெல்லம், சந்தனம், வெற்றிலை பாக்கு, பூ, பலகை, விசிறி, செங்கல், மணல், மாவிலை, அத்திஇலை, துளசிஇலை, மரத்தூள், தென்னங்குச்சி, தீப்பெட்டி, சூடம்
சமையல் சாமான்கள்:
வெல்லம், ப.பருப்பு, முந்திரி, ஏலம், மிளகு, சீரகம், கடுகு, உப்பு, புளி, உ.பருப்பு, எண்ணெய், வெண்ணை, எள், ப.அரிசி, ஏலக்காய்
தேங்காய், மாங்காய், ப.மிளகாய், இஞ்சி, கொ.மல்லி, கறிவேப்பிலை, வாழைக்காய், அவரை, கொத்தவரை, சேப்பங்கிழங்கு, சேனைகிழங்கு, தக்காளி, பிரண்டை, வெள்ளரிக்காய்
வாழையிலைகள், பூ, பழவகைகள், வெற்றிலை, பாக்கு
திவச சமையல் ITEMS:
பாயசம், பருப்பு, தேங்காய் பச்சடி, மாங்காய் பச்சடி, வாழைக்காய்கறி, அவரைகறி, மாங்காய்,இஞ்சி, பிரண்டை துவையல், கொத்தவரங்காய் பொரித்தகூட்டு, சேப்பங்கிழங்கு மோர்குழம்பு, தக்காளிரசம், எள்ளுருண்டை, உளுந்துவடை, அப்பம், சேனைவறுவல், தயிர்.
திவசம்:
1.வீட்டை சுத்தப்படுத்துதல்.
2.காய்கறி நறுக்குதல்
3. குளித்து, மடி உலர்த்துதல்
4, உ.பருப்பு, அரிசி, புளிக்கு தண்ணீர் ஊற்றி ஊறவைத்தல், சேனைக்கு உப்பு, மோர் ஊற்றி பிசறிவைத்தல்.
5.ஹோம சாமான்களை திவசஇடத்தில் ARRANGE செய்தல்.
6.சேப்பங்கிழங்கு, கொத்தவரை, மாங்காய்(பச்சடி) அலம்பி, COOKERல், ப.பருப்புடன் வேகவிடுதல்
7.தேங்காய் துருவுதல்.
8.முந்திரி, கடுகு, உ.பருப்பு, மிளகு, சீரகம், தனித்தனியாக வறுத்துக்கொண்டு, ப.மிளகாய், பிரண்டை வதக்குதல்.
9.வாழைக்காய், அவரை, வேகவிடுதல்.
10.உ.பருப்பு, மிளகு, சீரகம், தேங்காய், ப.மிளகாய்,இஞ்சி அரைத்து தனித்தனியாக வைத்தல்.
11.மாங்காயுடன் அரைத்த ப.மி, இஞ்சி விழுது, கடுகு,உப்பு சேர்த்து பிசரி வைத்தல்.
12. வெள்ளரியை MIXIEல் துருவி, உப்புசேர்த்து, பிழிந்து எடுத்து, தேங்காய், ப.மி., இஞ்சி விழுது, கடுகு சேர்த்து கலந்து, தயிரை மேலாக விட்டு வைத்து, பரிமாறும்போது கலந்து கொள்ளலாம்.
13. COOKERல் வெந்த ப.பருப்பை, ரசத்துக்கு நீர்க்க எடுத்து வைத்து விட்டு, கலத்துக்கு பருப்புக்கு, உப்பு, கடுகு கலந்து குழைத்து பதமாக எடுத்துவைத்து, பொரித்தகூட்டுக்கு எடுத்துக்கொண்டு, மீதியில் வெல்லத்தை நசுக்கிப்போட்டு அடுப்பிலேற்றி, கரையவிட்டு, முந்திரி, ஏலக்காய் பொடிபோட்டு, பரிமாறும்போது பால்விட்டு கலக்கவேண்டும்.
14. வாழைக்காய், அவரை வேகும்போதே உப்பு, தேங்காய், ப.மி, இஞ்சி விழுது, எண்ணெய், கடுகு, உ.ப. தாளிதம், க.வே., கொ.மல்லி சேர்த்து, பிரட்டி எடுக்கவேண்டும்.
15. வேகவைத்த கொத்தவரையுடன், உப்பு, உப., மிளகு,சீரக பொடிகள், தேங்காய், ப.மி, இஞ்சி விழுதுகள் (கொஞ்சமாக), வெந்த ப.பருப்பு, கடுகு, உ.ப. தாளிதம், க.வே., கொ.மல்லி எல்லாம் கலந்து அடுப்பில் கொதிக்கவிட்டு இறக்கவும்.
16.புளிகரைசலில், நறுக்கிய தக்காளி, உப்பு, மிளகு, சீரக பொடிகள், ப.மி.விழுது, க.வே. சேர்த்து கொதிக்கவிட்டு, பருப்பு தண்ணீர் விட்டு, நுரைத்தவுடன் கொ.மல்லி சேர்த்து இறக்கவும்.
17. சேப்பங்கிழங்கு, உப்பு, தேங்காய், ப.மி, இஞ்சி விழுது, சீரகபொடி, க.வே. போட்டு கொதிக்கவிட்டு, கடைந்த கெட்டி மோர் சேர்த்து, நுரைத்து வரும்போது இறக்கி, கடுகு, சீரகம், கொ.மல்லி போடவும்.
18. வெந்த மாங்காயுடன், வெல்லம், ப.மி., இஞ்சி விழுது கடுகு உ,ப. தாளிதம் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
19. வதக்கிய பிரண்டையுடன், புளி, உப்பு, ப.மி., இஞ்சி விழுது, க.வே., உ.ப. சேர்த்து துவையல் அரைக்கவும்.
20.எள்ளை வறுத்து குழிவான பாத்ரத்தில் எடுத்துக் கொண்டு, வெல்லத்தை கெட்டி பதம் வைத்து, (தண்ணீரில் சொட்டு விட்டால் ஓடாமல், உருட்ட வரும் பதம்),கரண்டியால் எள்ளில் ஊற்றி, கிளறி, நெய்யை தொட்டுக்கொண்டு உருட்டி போட வேண்டும்.
21. ஊற வைத்து, உ.ப.வில், ப.மி., இஞ்சி, உப்பு, சேர்த்து அரைத்து, மிளகு, க.வே. கலந்து, வடை தட்டி எடுக்கவேண்டும்.
22.ஊற வைத்த அரசி, 1 SPOON உ.ப., வெல்லம் சேர்த்து அரைத்து, அப்பக்காரை அல்லது இலுப்பச்சட்டியில் எண்ணெய் வைத்து அப்பம் பொரித்தெடுக்கவும். 23.மோர் கலந்த நறுக்கிய சேனையை ஒட்ட பிழிந்து, எண்ணெயில் போட்டு, வறுவல் செய்யவும்.
24. சாதம். சாதம் எப்போதும் கடைசியில் வைத்தால் சாப்பிடும்போது சூடாக இருக்கும்.
25.பழங்களை அலம்பி, நறுக்கி வைக்கவும். SETஆக எடுத்து வைக்கவும். 26.ப்ராம்மணாளுக்கு 4 இலைகள், லக்ஷ்மி இலை 1 பார்த்து எடுத்து, துடைத்து வைக்கவும்.
இத்தனையையும் PLAN பண்ணி முன்னாடியே எழுந்து, தயாரா பண்ணியாச்சுன்னா, ப்ராம்மணாள் வரும்முன்பே முடித்தாகிவிட்டதுன்னா, மற்றதெல்லாம் உற்சாகமாக முடித்துவிடலாம்.
சாஸ்திரிகள், ப்ராம்மணாள் வந்ததும், குடிக்க என்னவேண்டும் என்று கேட்டு கொடுக்க வேண்டும். காபி, டீ, வெயில் காலத்தில் FRUIT JUICES கொடுக்கலாம். என் FRIEND, ”எல்லாம் பண்ணலாம். வந்தவாளுக்கு COFFEE கொடுக்க எனக்கு எரிச்சலாய் இருக்கும்” என்று சொன்னாள். ஏனென்றால், அவர்கள் வீட்டில் சமைக்கும்போது ஒன்றும் குடிக்கமாட்டார்களாம். அவர்களுக்கு கொடுக்கிறோம். அப்ப எனக்கு குடிக்கமுடியலையேன்னு இருக்கும் என்றாள். இது எதுக்கு. அவர்கள் வருவது நம் வீட்டு விஷேசத்தை நடத்தி கொடுக்க……சமைக்கும்போது குடிக்கக்கூடாது என்பதில்லை. அதிகம் குடித்தால், 1,2, ப்ரச்னை, மடி கிடையாது என்பதால்தான், நீயும் ஒரு டம்ளர் குடித்துக்கொள் இனிமே என்றேன்.
ப்ராம்மணாள் குளிக்க, எண்ணெய், சீயக்காய் கொடுக்கவேண்டும். இப்போதெல்லாம், யாரும் எண்ணெய் தேய்த்து குளிப்பதில்லை. சாஸ்த்ரமாகத்தான் எடுத்துக்கொள்கிறார்கள். இதற்கு SHAMPOO, SOAPS கொடுக்கலாம். குளிக்க வெந்நீர் வேண்டுமா என கேட்கவேண்டும். அதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
சிலர் புது வஸ்த்ரத்தை அப்படியே கொடுப்பர் அல்லது நனைத்து உலர்த்தி கொடுப்பர்.
ஹோமத்திற்கு நெய் உருக்கி READYயாக வைக்கவேண்டும்.
வீட்டு பெண்டிரை, சங்கல்பத்தின் போது, தர்ப்பை பிடிக்கக் கூப்படுவர். முன்பு ஹோம அக்னி அடுப்பிலிருந்து பெண்கள் கொண்டு தருவர். இப்போது, சூடம் ஏற்றி வைக்க கூப்பிடுவர்.
ஹோமம் ஆரம்பித்தும் ஒரு கரண்டி அன்னம், ஒரு அப்பம் தரவேண்டும்.
ப்ராம்மணாள் இலைபோட்டதும் சாஸ்திரிகள் சொல்லும் போது நெய் விட்டு, பின் பாயசம், பருப்பு, பச்சடிகள், கறிகள், மாங்கய், இஞ்சி, பக்ஷணங்கள், பழங்கள் பரிமாறி, பின், முதலில் சாதம் விஸ்வேதேவருக்கும், பின் பித்ரு வர்ணத்திற்கும், அடுத்து மகாலக்ஷ்மி இலைக்கும் பரிமாறி, மந்திரங்கள் முடிந்து, பொரித்தகூட்டு, மோர்குழம்பு, ரசம், பக்ஷணங்கள், பாயசம், தயிர் என கேட்டுகேட்டு பரிமாற வேண்டும். குடிக்க வெந்நீர் வேண்டுமா என கேட்கவேண்டும்.
ப்ராம்மணாள் சாப்பிட்டு முடிந்ததும், கையளவில் ஒரு பிண்டமும், உதிரி அன்னமும் கொண்டுவந்து தரவேண்டும்.
ப்ராம்மணாள் சம்பாவணை, ஆசிர்வாதம் முடிந்ததும், தட்டில் 21 பிண்டம், ஒருவடை, ஒரு அப்பம், வெற்றிலை பாக்கு வைத்து தரவேண்டும். இந்த 21 பிண்டம் முடிந்ததும் தான் திவசம் முடிகிறது.
சாஸ்திரிகள் சம்பாவணை முடிந்து எல்லோரும் சாப்பிடணும்.
பக்ஷணங்கள் இன்னும், ஒவ்வொரு வீட்டுக்குவீடு சுழியன், அதிரசம், கேசரி, அல்வா, தேன்குழல், பூரி,உளுந்து அப்பளம், கொழக்கட்டை, மைசூர்பாக் என திவச பக்ஷண LIST நீளும். இதெற்கெல்லாம் பயந்துதான், கொஞ்சம் கொஞ்சமாக திவசம் வீட்டில் செய்வதும், ஆத்துப் பெண்டிர் திவச சமையல் செய்வதும் குறைந்துவிட்டது. திவசத்தில் மிக முக்யமானது வடை, அப்பம், எள்ளுருண்டை மட்டும்தான்.
இன்னொன்று, நிறைய சமைக்கவேண்டும். நிறைய மீந்து WASTE ஆகும் என்று ஒரு காரணம் சொல்வர்.. முன்பு ப்ராம்மணார்த்தம் சாப்பிடுகிறவர்களுக்கு நிறைய போடவேண்டும் என்று அள்ளி அள்ளி பரிமாறுவார்கள். இலைநிறைய ITEMSம் பரப்புவார்கள். அவர்களும் நிறைய நிதானமாக சாப்பிடுவார்கள். இப்போது அப்படி சாப்பிடுபவர்களே இல்லை. சாப்பிடும் முறை தெரிந்தவர்களே இல்லை. அதனால், எல்லாவற்றையும் தொட்டு வைப்பவர்கள்தான் அதிகம். திருப்தியாக, வயிறு நிறைய அவர்கள் சாப்பிடவேண்டும். நிறைய எறிய வேண்டும் இலையில் என்பது சாஸ்த்ரம் இல்லை
சமையலில் தேங்காய் சேர்ப்பது TASTEக்காக மட்டும் இருக்க வேண்டும். அதிகமாக சேர்க்கக்கூடாது. ப்ராம்மணார்த்தம் சாப்பிடுபவர்கள் இரவு எதுவும் சாப்பிடக்கூடாது, எனவே பசிக்காமல் இருக்கத்தான், உளுந்து, தேங்காய், நெய் சேர்த்து சமைப்பது. அதே சமயம் HEAVYயாக ஹிம்சையாக இல்லாமல் பார்த்துபார்த்து, TASTYயாக சமைக்க வேண்டும்.
எள், இப்போதெல்லாம் கல், மண் எதுவும் இல்லாமல் நன்றாக கிடைக்கிறது. எனவே, ஊறவைக்கத்தேவையில்லை. அந்த காலத்தில் முறத்தில் போட்டு தேய்த்தெடுத்ததெல்லாம், வறுக்கும்போது கருகாமல் வறுபட்டிருக்கிறதா என்பதை பார்க்கத்தான். இப்போது எள்ளை கருகாமல் வறுக்க, வெள்ளை எள்ளை வாங்கி ஒன்றாக கலந்து வறுத்துக் கொள்ளலாம். எல்லா தானியத்தையும் மேல் தோலுடன் சாப்பிட சத்து அதிகம். ஆனால், ஹோமத்திற்கு கருப்பு எள்தான் எடுத்து வைக்க வேண்டும்.
அப்பத்தை அரிசி, உ.ப., வெல்லம் சேர்த்து அரைத்து செய்யலாம். அல்லது இன்னும் EASYயாக கோதுமை மாவில் வெல்லம் போட்டு கரைத்தும் செய்யலாம்.
ஹோமத்துக்கு நெய்யை கடையில் வாங்குவதைவிட, வெண்ணெய் வாங்கி, முதல் நாள் மடியாக காய்ச்சி, தனியாக வைத்துக் கொள்ளலாம். வெல்லம் நசுக்குதல், ஏலக்காய் பொடி, பண்ணிக்கொள்ளலாம். அந்த காலத்தில் வீட்டில் மாடுஇருக்கும். எனவே, வீட்டு நெய்யைதான் உபயோகிப்பார்கள். அதுபோல எண்ணெய் செக்காடி கொண்டு வந்து, குடத்தில் வைத்திருப்பர். அதிலிருந்துதான் உபயோகிப்பர். எனவே, தீட்டுப்படாமல் மடியாக உள்ளவர்கள் வீட்டில் இவற்றை உபயோகிக்கலாம்.
சக்கரவள்ளிகிழங்கு, கரனைகிழங்கு, பாகற்காய், புடலங்காய், வெண்டைக்காய், பூசனிக்காய் சேர்க்கலாம். பலாமுசு என்ற பலாபிஞ்சு ரொம்ப விஷேசம். அந்த காலத்தில் வீட்டில் கொல்லையில் பயிரிடும் கீரையை, கீரைத்தண்டை திவசத்திற்கு சமைப்பார்களாம்.
இதைப்பற்றி ஒரு சம்பவம். என் ஆத்துக்காரர், கிருத்திவாசன் அவர்களின் தாத்தா, எங்கேயோ உறவினர் வீட்டில் போய் ப்ராம்மணார்த்தம் சாப்பிடப்போய்விட்டு, வந்து, ”அவாத்தில் தெவசத்துக்கு கொல்லைல பறிச்ச கீரையை வைத்தே, எல்லா சமையலும் பண்ணி போட்டுட்டா, ………..(திட்டுதல்) , நம்மாத்து தெவசத்துல (தனக்கு!!!!) தேங்காய், தக்காளின்னு எல்லாம் சேர்த்து சமாராதன சமையலாட்டமா பண்ணனும்னு”, சொன்னாராம். இப்படி ஒரே காயை எல்லாவற்றுக்குமோ, அல்லது எல்லா காயையும் சேர்த்து அவியல், கூட்டு போன்றோ செய்யக்கூடாது.
திவச சமையலுக்கு 57 விதமான காய்கறிகள் சொல்லப்பட்டிருக்கிறதாம். முன்பு மின்ன இலை என்று ஒரு இலை. இதை திவசத்தில் சேர்ப்பார்கள். மாங்காய் கிடைக்காதபோது நார்த்தங்காயில் பச்சடி பண்ணுவார்கள்.
சிலர் மிளகு மட்டும்தான் சேர்ப்பர். சிலர் காய்ந்த மிளகாயும் கூட சேர்த்துக்கொள்வர். தனியா, வெந்தயம், க.ப., து.ப., பெருங்காயம் சேர்ப்பதில்லை திவச சமையலில். இல்லையே எங்காத்தில் சேர்ப்போமே என்பர் சிலர். என் சொந்தகாரர் வீட்டில், பெரியவர்கள் இருந்தபோது சொந்த ஊருக்குப்போய்தான், அங்குள்ள பெரியவர்களுடன் சேர்ந்து திவசம் செய்திருக்கிறார்கள். சில முறை, ஊருக்கு போய்வரும் செலவை பார்த்து, மனைவியை அழைத்து செல்வதில்லை. அவர்களுக்கு வயதானதும் ஹிரண்ய ஸ்ரார்த்தம், அப்பறம் அவர்கள் மறைந்த பிறகு பின் சந்ததிகளுக்கு, என்ன சேர்க்கனும், எதை சமைக்கனும், நம்மாத்து விதம் என்ன என்று தெரியவில்லை. அப்படி சமைக்கும்போது, வத்தல் மிளகாய், தனியா, பெருங்காயம் எல்லாம் சேர்க்கும்முறை வந்துவிடும். இதனால் ஒன்றுமில்லை. நன்றாக சமைத்து, வயிறு நிறைய சாப்பாடு போடனும் அதுதான் ப்ரதானம் என்று சொன்னேன்.
ப்ராம்மணாள் சாப்பிட்ட இலை. முன்பு குளத்தில் ஆற்றில் சேர்ப்பார்கள். மாட்டுக்கு கொடுக்கலாம். .
முன்பெல்லாம், அம்மி, கல்லோரல், இரும்பு உலக்கை, திருகை என பலவகை ACCESSORIES உபயோகித்தும், நிறைய பொருட்களை தேடித்தேடி சேகரித்தும் ஆத்தில் திவசம் செய்தனர். அதனால் கிடைத்த ஆசீர்வாதத்தில்தான் நாம் இன்று நன்றாக இருக்கிறோம். இப்போது நமக்கு நிறைய வசதிகள் இருக்கிறது. தட்டுப்பாடில்லாமல் எதுவேண்டுமானாலும் கிடைக்கிறது. மேலே சொன்ன விதமாக முக்யமான ITEMS மட்டும் செய்து, இந்த ITEMSஐயே இன்னும் RICHஆக, TASTEஆக செய்யலாம். தக்காளி, தேங்காய், முந்திரி, பாதாம், தே.எண்ணெய், ஏலக்காய், இவற்றை சேர்க்கலாம். இதைச் செய்ய மனம்தான் வேண்டும். அதனால்தான் ஸ்ரத்தையாக செய்யும் இதனை ஸ்ரார்த்தம் என்றனர். நம்மைப்பார்த்துத்தான் அந்த ஸ்ரத்தையை நம் சந்ததிகள் கற்றுக் கொள்வர். நல்ல க்ஷேமமாக இருப்பர்.